< Back
மாநில செய்திகள்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

நாகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது.

நாகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது.

கண்காணிப்பு குழு கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரு ஆண்டிற்கு 4 முறை நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிற திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செம்மையாக செயல்படுகிறதா?, நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படும்.

ஆய்வு

அதன்படி இந்த கூட்டத்தில் மத்திய அரசு வழங்குகின்ற திட்டங்களான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வீட்டு கட்டும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பிற அனைத்து துறைகளில் உள்ள மாநில அரசு திட்டம் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மக்களிடையே எந்த அளவிற்கு சென்றிருக்கின்றது என்று ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர், நாகை மாவட்டத்தில் அனைத்துத்துறை சார்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்கள் குறித்து விரிவாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

பரிசீலனை

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடன் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்திட, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்