< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரையில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
|26 Oct 2023 5:35 PM IST
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வருகிற 27, 29, மற்றும் 30 ஆகிய நாட்களில் அனைத்து விதமான மதுபான கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகள் மீறுவோர்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.