< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
காய்கறி விதைகள் வினியோகம்
|14 Aug 2023 12:52 AM IST
காய்கறி விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் ஆடிபட்ட காய்கறி விதைகள் வினியோக முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசீலி தலைமை தாங்கினார். முகாமில் வீட்டு தோட்டம் அமைப்பது பற்றியும், நிலத்தை தயார் செய்தல், நடவு முறை, உரமிடல், நீர் பாசனம், பயிரின் பாதுகாப்பு முறைகள் பற்றி கூறினார். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு ஆடிபட்ட காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை துறை அலுவலர் நவீன்ராஜ் செய்திருந்தார்.