< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல்
|27 Jun 2023 12:30 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வாசுதேவநல்லூர்:
ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளிகளின் சக்ஷாம்அமைப்பு சார்பில் தென் தமிழ்நாடு 2023-2024 ஆண்டுக்கான மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் பிரைட் அப் இந்தியா விருது பெற்ற அ.ஆனந்தன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் உள்பட பலருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சக்ஷாம் அமைப்பின் தேசிய தலைவர் ராஜகோபால், மாநில பார்வையாளர் ஆடல்அரசு, தென் தமிழக நிர்வாகிகள் நல்லகண்ணு, ராஜகோபால் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.