அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
|பென்னாகரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம்,
பென்னாகரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழ்நாடு சொசைட்டி நிறுவனம் சார்பில் முட்டை விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றாச்சாட்டு எழுந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களிடம் விளக்கம் கேட்டனர்.
அப்போது, பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளே விநியோகம் செய்யப்படுவதாகவும், அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் முறையான பதில் கூறவில்லையெனவும் சத்துணவு பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால், முட்டைகளை மாணவர்களுக்கு வழங்காமல், குழி தோண்டி புதைத்து வருவதாகவும் கூறினர்.