< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
6 Jan 2024 8:06 AM IST

கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவதற்காக கொள்முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கூறியதாவது, கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழு அமைக்கப்பட்டடுள்ளது.

இதில் சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு, வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு, சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்