< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்
|25 Sept 2023 11:43 PM IST
மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ஆலங்குடி அருகே கோவில்பட்டி அரசு பள்ளியில் டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்றவற்றிலிருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடகாடு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களால் வழங்கப்பட்ட நிலவேம்பு பொடியானது பள்ளியில் காய்ச்சப்பட்டு, பின் குளிர்விக்கப்பட்டு இளம் சூட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், ஆசிரியர் சசிகுமார், சத்துணவு அமைப்பாளர் ராஜேஸ்வரி, சத்துணவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.