< Back
மாநில செய்திகள்
992 ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்
விருதுநகர்
மாநில செய்திகள்

992 ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்

தினத்தந்தி
|
2 Dec 2022 12:15 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் 992 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 992 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

விருதுநகர் கட்டையாபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக ரேஷன் கடையில் நேற்று ரேஷன்கார்டுதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் செறிவூட்டப்பட்ட அரிசியானது குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 992 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48.57 சதவீதம் மற்றும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 128 ரேஷன்கார்டுதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.68 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

ரத்த சோகையை தடுக்கும்

இதில் செறிவூட்டப்பட்ட அரிசியானது 100 மெட்ரிக் டன் அரிசியுடன் ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணை கலக்கப்பட்டு சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது வினியோகத்திட்ட கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்த சோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கு ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் இயற்கையான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எனவே மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கலந்து கொண்டோர்

இந்த நிகழ்ச்சியில் நுகரபொருள் வாணிப கழக மண்டலமேலாளர் விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்