< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்
அரியலூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்

தினத்தந்தி
|
20 July 2023 12:00 AM IST

அரியலூர்-செந்துறை தாலுகாக்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்குவார்கள் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகள்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப முகாம்கள் முதல் கட்டமாக 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை அரியலூர் தாலுகாவில் 163 ரேஷன் கடைகள் மற்றும் செந்துறை தாலுகாவில் 74 ரேஷன் கடைகள் என மொத்தம் 237 ரேஷன் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. 2-ம் கட்டமாக 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஜெயங்கொண்டம் தாலுகாவில் 162 ரேஷன் கடைகள் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவில் 67 ரேஷன் கடைகள் என மொத்தம் 229 ரேஷன் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படும்.

விண்ணப்பங்கள், டோக்கன்

முதல் கட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள், அரியலூர் மற்றும் செந்துறை தாலுகாக்களில் மட்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். முதல் கட்டமாக 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை அரியலூர் வருவாய் வட்டத்தில், பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் (வடக்கு), வாலாஜா நகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி, நாகமங்கலம், ரெட்டிப்பாளையம், புதுப்பாளையம், சிறுவளூர், கருப்பூர் சேனாபதி, இடையத்தாங்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார் கட்டளை, கருப்பிலாக்கட்டளை, அருங்கால், ஆண்டிப்பட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர், மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழூவூர், கீழையூர், கீழப்பழூவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு), சன்னாவூர் (தெற்கு), பளிங்காநத்தம், கரையவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூர், கோவில்எசனை (மேற்கு), கோவில்எசனை (கிழக்கு), எலந்தைக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு), குலமாணிக்கம் (கிழக்கு), கண்டிராதீர்த்தம், திருமழபாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், விழுப்பனங்குறிச்சி, கீழக்கொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர்.

செந்துறை, அரியலூர்

செந்துறை வருவாய் வட்டத்தில் ஆனந்தவாடி, உஞ்ஜினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை, சிறுகளத்தூர், பொன்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகடம்பூர், சன்னாசிநல்லூர், தளவாய்(வடக்கு), தளவாய்(தெற்கு), ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்தனூர், குழுமூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, துளார் ஆகிய கிராமங்களின் ரேஷன் கடைப்பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

அரியலூர் நகராட்சிப்பகுதியில் அமுதம், அமராவதி-1, அமராவதி-2, அமராவதி-3, ஏ.சி.எம்.எஸ்-1, ஏ.சி.எம்.எஸ்.2, வி.எஸ்.பி-1, வி.எஸ்.பி-2 ஆகிய ரேஷன் கடைப்பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

ஜெயங்கொண்டம்

2-ம் கட்டமாக 5-ந் தேதி முதல் 16-ந் ேததி வரை ஜெயங்கொண்டம் வருவாய் வட்டத்தில், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம்(மேற்கு), உதயநத்தம்(கிழக்கு), அணைக்குடம், தா.பழூர், கோடங்குடி(வடக்கு), கோடங்குடி(தெற்கு), நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புகுடி, மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான்(மேற்கு), வெண்மான்கொண்டான்(கிழக்கு), பருக்கல்(மேற்கு), பருக்கல்(கிழக்கு), கோவிந்தபுத்தூர், நடுவலூர்(மேற்கு), நடுவலூர்(கிழக்கு), சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாபூர், உடையவர்தீயனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான்(வடக்கு), ஸ்ரீபுரந்தான்(தெற்கு), பாப்பாக்குடி(வடக்கு), பாப்பாக்குடி(தெற்கு), தர்மசமுத்திரம், வங்குடி, இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி(மேற்கு), குண்டவெளி(கிழக்கு), முத்துசேர்வாமடம், காட்டகரம்(வடக்கு), காட்டகரம்(தெற்கு), குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, குருவாலப்பர்கோவில், தேவாமங்கலம், அங்கராயநல்லூர்(மேற்கு), அங்கராயநல்லூர்(கிழக்கு), சூரியமணல், இடையார், வாணதிரையன்பட்டினம், பிலிச்சிக்குழி, தா.சோழங்குறிச்சி(வடக்கு), தா.சோழங்குறிச்சி(தெற்கு), தத்தனூர்(மேற்கு), தத்தனூர்(கிழக்கு), எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை(வடக்கு), உட்கோட்டை(தெற்கு), பெரியவளையம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், இராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை(வடக்கு), விளந்தை(தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான்(வடக்கு), அணிக்குதிச்சான்(தெற்கு), சிலம்பூர்(வடக்கு), சிலம்பூர்(தெற்கு), இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர்(வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுக்கூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர்(மேற்கு), இலையூர்(கிழக்கு), மேலூர் ஆகிய கிராமங்களின் ரேஷன் கடைப்பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

உடையார்பாளையம்

ஜெயங்கொண்டம் நகராட்சிப்பகுதியில் அமுதம், அமராவதி-1, அமராவதி-2, செங்குந்தபுரம், ஜெயங்கொண்டம்-1, ஜெயங்கொண்டம்-2, ஜெயங்கொண்டம்-3, ஜெயங்கொண்டம்-4, கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, ஜீப்லி ரோடு, கொம்மேடு ஆகிய ரேஷன் கடைப்பகுதிகளில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

உடையார்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் உடையார்பாளையம்-1, உடையார்பாளையம்-2, உடையார்பாளையம்-3, உடையார்பாளையம்-4 மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி பகுதியில் தென்னூர், வரதராஜன்பேட்டை-1, வரதராஜன்பேட்டை-2 கல்லன்கொல்லை ஆகிய ரேஷன் கடைப்பகுதிகளில் 2- கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்