அரசு மருத்துவமனையில் அவலம்... மாப் குச்சிகளில் குளுக்கோஸ் பாட்டில் - வைரலாகும் வீடியோ
|இச்சம்பவத்தால் மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லையா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மாப் குச்சிகளில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஒரு சில நோயாளிகள் கொசுவலை கட்டுவதற்காக மாப் குச்சிகளை வைத்திருந்தனர்.
அதில் குளுக்கோஸ் பாட்டிலை கட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இச்சம்பவத்தால் மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லையா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.