< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை சனத்குமார் ஆற்றில் கரைப்பு
|23 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்தனர். அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறி சிலை எடுத்து வந்ததால் பாலக்கோடு போலீசார் லாரியுடன் சிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிலையை போலீஸ் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.
இதனிடையே சிலை கரைக்க கடைசி நாளான நேற்று பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. விநாயகர் சிலையை வழிபாடு செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் நகரின் முக்கிய வீதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று கிரேன் மூலம் சனத்குமார் ஆற்றில் கரைக்கப்பட்டது.