< Back
மாநில செய்திகள்
தகுதி நீக்கம்..ராகுல் காந்தி நினைத்ததுதான் நடந்திருக்கிறது;  குஷ்பு டுவிட்
மாநில செய்திகள்

தகுதி நீக்கம்..ராகுல் காந்தி நினைத்ததுதான் நடந்திருக்கிறது; குஷ்பு டுவிட்

தினத்தந்தி
|
25 March 2023 10:51 AM IST

துரதிருஷ்டவசமாக நான் ஒரு எம்.பி ஆகிவிட்டேன் என்று ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிட்டன என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

புதுடெலி,

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு ராகுல் காந்தி பேசியதையே மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- துரதிருஷ்டவசமாக நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டேன் என்று ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அவரது வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிட்டன. எதையும் நேர் மறையாக சிந்தியுங்கள். எதிர்மறையாக உங்களை எங்கும் அழைத்து செல்லாது. மன்மோகன் சிங் 2013-ல் நிறைவேற்றப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர விரும்பினார். அதை ராகுல் காந்தி துண்டு துண்டாக கிழித்தார். இப்போது ராகுலின் தகுதி நீக்கமும் அதே தீர்ப்பில் இருந்துதான் வருகிறது. இதுதான் கர்மவிைன என்பது. இவ்வாறு குஷ்பு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்