திருவள்ளூர்
திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு; மகனை அடித்து கொன்ற தந்தை
|மதுராந்தகம் அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறில் ஈடுபட்ட மகனை தந்தை அடித்துக்கொலை செய்தார்.
தகராறு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புளியரணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 53). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகன் ஆனந்த் (30) சென்னையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு திருமணம் செய்து வைக்கக்கோரி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு அவர் களை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் அருகே இருந்த கட்டையால் மகன் ஆனந்தின் கழுத்து பகுதியில் தாக்கியுள்ளார்.
கொலை
இதில் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்து நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆனந்தின் அண்ணன் சித்தாமூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சேகரை கைது செய்து விசாரித்து வருகி்ன்றனர்.