< Back
மாநில செய்திகள்
இடப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு: முதியவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை
மாநில செய்திகள்

இடப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு: முதியவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை

தினத்தந்தி
|
24 March 2024 10:57 PM IST

முதியவருடன் வாக்குவாதம் செய்த குமார் என்பவர், ஆத்திரத்தில் மண்வெட்டியால் தலையில் தாக்கினார்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே, இடப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவனூர் ஊராட்சியில் வாஞ்சிநாதன் என்ற முதியவர், தனது வயலில் இருந்த கருவேல மரங்களை வெட்டி, சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர், முதியவருடன் வாக்குவாதம் செய்த நிலையில், ஆத்திரத்தில் மண்வெட்டியால் தலையில் தாக்கினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த முதியவர் வாஞ்சிநாதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்