< Back
மாநில செய்திகள்
பாதை சம்பந்தமாக தகராறு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பாதை சம்பந்தமாக தகராறு

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

தியாகதுருகம் அருகே பாதை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 62). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது தம்பி முனுசாமி என்பவருக்கும் விவசாய நிலத்தில் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து இருவரும் தனித்தனியாக தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முனுசாமி, இவரது மனைவி சரசு, ராஜேந்திரன், இவரது மனைவி பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்