ராமநாதபுரம்
காலி பாட்டில்கள் சேகரிப்பதில் தகராறு; கத்திக்குத்து
|காலி பாட்டில்கள் சேகரிப்பதில் தகராறு; கத்திக்குத்து
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). ராமநாதபுரம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (75). இவர்கள் இருவரும் காலிபாட்டில்கள் சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டில் சேகரிப்பதில் இவர்களுக்கு தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் முருகன் பாட்டில் சேகரித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த முருகானந்தம் நான் இருக்கும் பகுதிக்கு வராதே என்று சொன்னால் கேட்கமாட்டாயா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம், கத்தியால் முருகனின் மார்பில் குத்தினார். காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.