தென்காசி
பட்டாசு வெடித்ததில் தகராறு; வாலிபர் கைது
|பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி மகன் முருகன் (33). இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிச்சைபாண்டியின் மகன், வீட்டு முன் பட்டாசு வெடித்தார். இதனை முருகன், அவரது தாய் கோமதிதாய் ஆகியோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைப்பாண்டி, அவரது மனைவி முத்துதுரைச்சி, முத்துதுரைச்சியின் சகோதரர்கள் பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் சேர்ந்து முருகன், அவரது தாயாரை தாக்கியதாகவும், தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ் ணன், சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகனை போலீசார் கைது செய்தனர்.