< Back
மாநில செய்திகள்
கோவில் திருவிழாவில் தகராறு; விவசாயிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி
மாநில செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு; விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
25 May 2023 8:16 PM GMT

கோவில் திருவிழாவில் தகராறு; விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சோமரசம்பேட்டை:

தாக்குதல்

சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் கிராமத்தில் மாரியம்மன், குஞ்சாயி அம்மன், மலையாளி கருப்பு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குட்டிகுடி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது தேர் முன்பாக தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்த விவசாயியான மூர்த்தி (வயது 43) தரப்பினர் ஆடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் தாயனூர் மேலத்தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து அங்குள்ள நாடக மேடையில் ஆடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தரப்பினர், விக்னேஷ் மற்றும் அவருடன் இருந்த நண்பர் ஒருவரை சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து விக்னேஷ் வீட்டிற்கு சென்று அதுபற்றி கூறியுள்ளார்.

அரிவாள் வெட்டு

இதையடுத்து அவரது அண்ணன் லோகேஷ்(22), தம்பி ராஜேஷ்(19) ஆகியோர் விக்னேசை அழைத்துக்கொண்டு மூர்த்தியிடம் சென்று, உங்களுடைய ஆட்கள் எதற்கு விக்னேசை அடித்தார்கள் என்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது வாய் தகராறு முற்றியதில் விக்னேஷ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து மூர்த்தியை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், லோகேஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவில் ஒருவருக்கு அரிவாள் விட்டு விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்