< Back
மாநில செய்திகள்
16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

தினத்தந்தி
|
27 May 2022 11:50 PM IST

அரக்கோணம் தாலுகாவில் 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

அரக்கோணம்

2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை 3 மணி நேரத்தில் அகற்றும் சாதனை நிகழ்வை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தார்.

அதன்படி அரக்கோணத்தில் தாசில்தார் பழனிராஜன் தலைமையில் நகரசபை தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் கலாவதி, நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் மோகன் நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நகரின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

அரக்கோணம் நகராட்சி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தக்கோலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
மேலும் செய்திகள்