< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை வினியோகம்
|7 Jun 2023 1:33 AM IST
தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை வினியோகம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாலித்தீன் பைகளை ஒழிக்கும் பொருட்டு பக்தர்களுக்கு மஞ்சப்பை தானியங்கி எந்திரம் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. தக்கார் ரவிச்சந்திரன் தானியங்கி எந்திரத்தை தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் தானியங்கி எந்திரங்கள் மூலம் மஞ்சப்பை பெறும் வசதி செய்யப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.