< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பு
|27 July 2022 1:06 AM IST
பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திர குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அவற்றை பெங்களூருவில் உள்ள பாரத் மின்னணு வாக்கு எந்திர தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் குடோனை திறந்தனர். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுதானவை லாரிகளில் ஏற்றி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.