< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் பணியிடை நீக்கம்
|26 May 2022 12:49 AM IST
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.ஒகையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் எஸ்.ஒகையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விவசாயிகளிடம் இருந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் கலியமூர்த்தி லஞ்சம் வாங்கியது தெரிந்தது. .இதையடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் கலியமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.