< Back
மாநில செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

பழங்குடி இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா டி.மண்டபத்தில் பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த கர்ப்பிணி உள்பட 4 பெண்களை விசாரணைக்காக திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அங்கு அந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி.வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த 14-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், 2-வது முறையாக விழுப்புரம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்