< Back
மாநில செய்திகள்
கரூர் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிப்பு
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிப்பு

தினத்தந்தி
|
18 Aug 2022 12:18 AM IST

கரூர் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடைகளும், கழிவுநீர் வாய்க்கால்களும் ஏராளமாக உள்ளன. சில பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகள் மூடி வைக்காமல் திறந்த நிலையில் உள்ளன. மேலும் சில கழிவு நீர் வாய்க்கால்களும் சரியாக தூர் வாரப்படாமலும் உள்ளன. இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வந்தனா். மேற்படி பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் மூலம் பல்வேறு கொசுக்கள் பரவி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து கரூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கொசுக்களை ஒழிப்பதற்காக கிருமிநாசினி தெளித்தனர். இதனால் அப்பகுதி ெபாதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

மேலும் செய்திகள்