< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
|3 Jan 2023 1:35 AM IST
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் மதுரை செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள வரத்து கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மழை நீர் வரத்து கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழை நீரும், கழிவு நீரும் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல், மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.