< Back
மாநில செய்திகள்
பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்

தினத்தந்தி
|
3 March 2023 1:00 AM IST

காரியாபட்டி அருகே பருத்தி செடிகளில் நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே பருத்தி செடிகளில் நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதி வானம் பார்த்த பூமியாகும். மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்தபகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெல் அறுவடை செய்யப்பட்டு அதன் பின்னர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நோய் தாக்குதல்

தற்போது 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி நன்கு வளர்ந்து பூ எடுக்கும் நேரத்தில் பருத்தி செடியில் நோய்கள் தாக்கி பருத்தி செடி முழுவதும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது பருத்தியை ஒரு வித நோய் தாக்கி உள்ளது.

இதனால் செடியானது கருகி வருகிறது. எனவே வேளாண்மைத்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட செடிகளை ஆய்வு செய்து என்ன மாதிாியான நோய் தாக்கி உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

அத்துடன் இந்த ேநாயை தடுக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கி செடிகளை காப்பாற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்