< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி பகுதியில்பொதுமக்களை அதிகளவில் பாதிக்கும் கண் நோய்
|3 Oct 2023 1:00 AM IST
வேப்பனப்பள்ளி பகுதியில் பொதுமக்களை அதிகளவில் கண் நோய் பாதித்துள்ளது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் கண்களை பாதிக்கும் `மெட்ராஸ் ஐ' நோய் பரவி வருகிறது. வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தமாண்டரப்பள்ளி, பண்ணப்பள்ளி, நேரலகிரி, எட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சிறப்பு முகாம்கள் அமைத்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.