< Back
மாநில செய்திகள்
நாயக்கர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடல்
கரூர்
மாநில செய்திகள்

நாயக்கர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடல்

தினத்தந்தி
|
31 July 2022 12:20 AM IST

நாயக்கர் சமுதாய மக்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.டி.மலை ஊராட்சி வாளியம்பட்டியில் பள்ளிக்கூட மணியடிச்சாச்சு என்ற தலைப்பில் நாயக்கர் சமூகத்தினரிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் சேர்வதற்கு முன்வர வேண்டும். மதிய உணவு மற்றும் அங்கன்வாடியில் வழங்கப்படும் சத்துணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்கள் உயர்கல்வி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வதற்கு வழி வகுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்த பெண்கள் சிறப்பு ஓய்வறை அமைத்து தரப்படும் என்றார்.

தொடர்ந்து பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு பரிசுகளும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல் போன்றவை குறித்த கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களும் திரையிடப்பட்டன. இதில், ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ். மந்தா நாய்க்கர்கள் சின்னசாமி, கோபாநாய்க்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்