< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
26 Dec 2022 12:39 AM IST

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு முதுகலை விஞ்ஞானியும், தலைவருமான அழகுதுரை வரவேற்று பேசினார். இதில் விஞ்ஞானிகள் அழகுதுரை, முத்துராஜ், ஜெகநாதன், பிரகாஷ் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரை யாடினர்.

இதனிடையே திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் மரவள்ளியில் புதிய ரகங்கள் குறித்தும், மூத்த விஞ்ஞானி ஜெகநாதன் மரவள்ளி சாகுபடி முறைகள் குறித்தும், விஞ்ஞானி பிரகாஷ் மரவள்ளிக்கிழங்கை சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கிப் பேசினார்கள். அதேபோல் சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி தேன்மொழியும், புதிய ரக ஒட்டுண்ணிகள் உற்பத்தி முறைகள் குறித்து டாக்டர் சங்கரும், ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து டாக்டர் முத்துசாமியும், அங்கக முறையில் மீன் வளர்த்தல் குறித்து டாக்டர் பால்பாண்டியும், இயற்கை முறையில் மண் மேலாண்மை குறித்து டாக்டர் சத்யாவும் பேசினர். முடிவில் டாக்டர் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்