திருச்சி
சிம்லாவில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடல்
|சிம்லாவில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார்
திருச்சி, ஜூன்.1-
இந்தியநாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதன் நினைவாக, பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருந்தபடி, இந்தியா முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுடனான காணொலி மூலம் கலந்துரையாடினார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்), பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி, பிரதான் மந்திரி உஜ்வால் யோஜனா, போஷன் அபியான், பிரதான் மந்திரி மாற்று வந்தனா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்), ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ருத், பிரதான் மந்திரி ஸ்வான் நிதி திட்டம், ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அன்ட் வெல்நெஸ் யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து கலந்துரையாடினார். நேற்று காலை 10.55 மணிக்கு தொடங்கப்பட்ட பிரதமர் மோடி காணொலி கலந்துரையாடல் மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்கா தாரணி, விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் சுமார் 400 பேர் இக்காணொலி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.