< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு
|6 July 2022 4:10 AM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 345 நபர்களுக்கு பருவகால பணியாளருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜமில் அப்பாஸ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், க.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.