< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம்

தினத்தந்தி
|
25 Feb 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் வியாபாரிகள், பொதுமக்கள் புகார்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-வது நாளாக ஆணையாளர் கீதா மேற்பார்வையில் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருவோர ஆக்கிரமிப்பு கடைகள் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் படிக்கட்டுகள் பாரபட்சமாகவே இடிக்கப்பட்டது.

இதை கண்டித்த பொதுமக்கள் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் தெருவோரம் பூ, பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம்செய்தனர். மேலும் இந்த பாரபட்சமான ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் வந்து பார்வையிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்