< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை நிற கல் மணிகள் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை நிற கல் மணிகள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
5 Sept 2024 7:57 AM IST

வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை நிற கல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 10 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. ஆபரணங்கள், செப்புக்காசுகள், சுடுமண் காதணிகள், சூது பவளம், உள்பட 1560 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

9-வது அகழாய்வு குழியை மேலும் தோண்டியபோது பச்சை நிறத்திலான 2 கல்மணிகள் கிடைத்துள்ளன. இவை பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்களாகவும், ஆண்கள் அணியும் மோதிரத்தில் பதிப்பதற்காகவும் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவப்பு, மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களிலும் கல்மணிகள் கிடைத்துள்ளன. எனவே முற்காலத்தில் இப்பகுதியில் கல்மணிகள், பாசிமணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்டவை தயாரிப்பு கூடம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார். முதல் இரண்டு கட்ட அகழாய்வைவிட தற்போது கூடுதலாக தொல் பொருட்கள் கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்