< Back
மாநில செய்திகள்
பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
26 Jun 2022 10:17 PM IST

கல்வராயன்மலையில் பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு

கச்சிராயப்பாளையம்

பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சஞ்சீவ்தேஸ்வால் தலைமையில் மீட்பு குழுவினர் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பருவமழையின்போது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மண்சரிவுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட அவர்கள் வஞ்சிக்குழி பெரியார் நீர்வீழ்ச்சி, தாழ்தொரடிப்பட்டு ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது கல்வராயன்மலை தாசில்தார் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்