< Back
மாநில செய்திகள்
பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
கடலூர்
மாநில செய்திகள்

பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

பண்ருட்டி பஸ் நிலையத்தில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பண்ருட்டி

உலக பேரிடர் தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பண்ருட்டி பஸ் நிலையத்தில் தாசில்தார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடா்ந்து தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் மண்டல துணை தாசில்தாா் சேகர்தாஸ், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, அரசு பள்ளி என்.சி.சி. ஆசிரியர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்