< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார்

தினத்தந்தி
|
9 Dec 2022 5:32 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் கனமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

'மாண்டஸ்' புயல்

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், இந்த புயலானது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரிடர் மீட்பு படை

நேற்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் திருவள்ளூருக்கு வந்தனர். இந்த பேரிடர் மீட்பு படையினர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு கயிறு ரப்பர் கப்பல், லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஜெனரேட்டர், விளக்குகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் நிர்வாகம் சார்பில் கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்