< Back
மாநில செய்திகள்
பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

தினத்தந்தி
|
1 Sep 2022 6:06 PM GMT

நன்னிலம் அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

நன்னிலம்:

நன்னிலம் அருகேயுள்ள தூத்துக்குடி கிராமத்தில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகளிலிருந்து, பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுதல், மேலும் மழை வெள்ள காலங்களில், பாதுகாப்பு எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முடிகொண்டான் ஆற்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தலைமை தாங்கினார்.நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், நன்னிலம் வட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முதல்நிலை கள பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?, தீயினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றுவது, வாகனங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளில் இருந்து சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர்.நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்