நாகப்பட்டினம்
பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
|திருமருகல், அகரகடம்பனூரில் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல், அகரகடம்பனூரில் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருமருகல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் திலக் பாபு தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார். திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு நிலைய வீரர்கள் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.இதில் மின்வாரியத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அகரகடம்பனூர்
நாகை மாவட்டம் கீழ்வேளூர்அருகே அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், முன்னிலை வகித்தார்.
பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப் பாற்றுவது? வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கீழ்வேளூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுப்பையா, .சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜசோழன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.