< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
|14 Oct 2022 12:15 AM IST
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத்துறை சார்பில், வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினார். வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூர் தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்படுகிற மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தீயணைப்பு படை வீரர்கள் சாமிநாதன், மார்த்தாண்டன், சுபாஷ், ராஜகுபேரன், பாலமுருகன், ஜேம்ஸ்பிரபுதாஸ், ராஜாராம், சதாம்உசேன் ஆகியோர் விளக்கி கூறினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.