< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
பேரிடர் மீட்பு ஒத்திகை
|17 Oct 2022 12:15 AM IST
தக்கலை அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை
தக்கலை,
தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தக்கலை அருகே உள்ள பரசேரி குளத்தில் நடந்தது. இதில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் எப்படி தற்காத்துகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து நடித்து காட்டினர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.