திருநெல்வேலி
பேரிடர் மீட்பு ஒத்திகை
|பேரிடர் மீட்பு ஒத்திகை
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாயத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் வெள்ள அபாய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்து கொண்டு செல்பவர்களை மீட்பு குழுவினர் காப்பாற்றுவது குறித்தும், தண்ணீரில் இருந்து காப்பாற்றியவர்களுக்கு முதலுதவி வழங்கி மீட்பு வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்தும் ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், நகர்மன்ற தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.