< Back
மாநில செய்திகள்
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை

தினத்தந்தி
|
5 Sept 2023 12:15 AM IST

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.


வால்பாறை


வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.


விழிப்புணர்வு ஒத்திகை


கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி உத்தரவின் பேரில் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் மற்றும் குட்டைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறை தீயணைப்பு வீரர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி வால்பாறையில் முக்கிய சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் கூழாங்கல் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.


மீட்டு முதலுதவிகள்


வால்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி பிரகாஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் கூழாங்கல் ஆற்றில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆறுகளில் பாதுகாப்பாக எவ்வாறு இறங்கி குளிக்க வேண்டும் என்பது குறித்தும், ஆற்றுத் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவிகள் செய்வது என்பது குறித்தும் ஒத்திகை மூலம் செயல்விளக்கம் அளித்தனர்.


வால்பாறை வருவாய் த்துறையினர், பொது மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்