< Back
மாநில செய்திகள்
முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

தினத்தந்தி
|
7 July 2022 5:23 PM GMT

கொள்ளிடம் அருகே முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள கோபாலசமுத்திரம் ஊராட்சி சாமியம் கிராமம் சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் குறுவட்ட அளவில் முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன் வரவேற்றார். இதில், சீர்காழி தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி கலந்து கொண்டு, மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஜெயபிரகாஷ், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில் வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்