சிவகங்கை
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
|பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் 3 கட்டமாக ஒத்திகை நடத்தப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மதுரை மண்டல முதன்மை செயல் மேலாளர் முருகேசன், செயல் மேலாளர் சுந்தர், சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை நிலைய அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். அவசரகால உதவி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி சேவை குறித்து திருச்சி இந்தியன் ஆயில் பைப் லைன் பொறியாளர் சுரேஷ், புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் ஜெயமணி சங்கர், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மதுரை மண்டல செயல் மேலாளர் சுந்தர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.