< Back
மாநில செய்திகள்
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 July 2023 12:45 AM IST

பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தலைஞாயிறு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சிநடந்தது. அப்போது தீ விபத்து மற்றும் கனமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைஞாயிறு கடைத்தெரு, சின்ன கடைத்தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்