< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
19 May 2023 12:30 AM IST

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் மனு அளிக்கலாம். கூட்டத்துக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். இதற்கு முன்னர் மனு அளித்திருந்தால் அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்களை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்