< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|19 April 2023 1:59 AM IST
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணம்:
கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.