< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
28 March 2023 12:15 AM IST

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை 25 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. முகாமில் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்