< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
19 Oct 2023 11:03 PM IST

செங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் முருகன், சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் ரேணுகா, சுகுணா, பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர்கள் முனுசாமி, மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் வட்டாட்சியர் முனுசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் மந்தாகினியிடம் வழங்கினர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன், செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்