< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|18 Aug 2023 3:15 AM IST
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஒ. கமலக்கண்ணன் தலைமை தாங்கி, குறைகளை கேட்கிறார். எனவே ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.